ஆச்சி, தாத்தாவின் கைகளைப் பற்றிக்கொண்டே நடைபோட்ட சிறு வயது நினைவுகள் என் மனத்தில் குட்டி குட்டி இன்ஸ்டா ரீல்ஸ் போல நிழலாடிக்கொண்டே இருக்கின்றன. ஆண்டுதோறும் இரண்டு மாத கோடை விடுமுறையில் எண்ணற்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பது வழக்கம். கூடவே சிலபல த்ரில் சம்பவங்களும் உண்டு. ஒரு வகையில் அவ்விரண்டுமே நம்மை ரசிக்க வைக்கும். ஆச்சி, தாத்தா, மாமா, சித்தி என்று உறவுகளின் மூலம் ஏராளமான அனுபவப் பாடங்களை 80'ஸ் & 90'ஸ் கிட்ஸ் நிறைய நிறைய கற்றுக் கொண்டோம். அவர்கள் சொல்வதை எந்த எதிர்ப்புமின்றி கேட்டுக்கொண்டோம். அப்படித்தான் வாழ்க்கையின் எல்லா சுவைகளையும் ரசிக்கப் பழகினோம். ஃப்ளாஷ்பேக்! ஒருமுறை கோடை விடுமுறைக்கு ஆச்சி என்னையும் தங்கையும் திருச்சியிலிருந்து அழைத்துச் சென்றார். அப்படியே மதுரைக்குச் சென்று தம்பியையும் அழைத்துக்கொண்டு தூத்துக்குடிக்குச் சென்றோம். பேரன் பேத்திகள் மட்டும் தனியாக ஒரு மாதம் ஆச்சி தாத்தாவோடு கழித்தோம். எங்கள் ஆச்சி தாத்தா இருவருமே ஜாலியாக இருப்பார்கள்... அதே நேரத்தில் அவசியமான கண்டிப்பும் உண்டு. அப்படி அவர்கள் கண்டிப்போடு நடந்துகொள்ளும்போது கொஞ்சம் கோபமும் நி
Virundhombal means serving food with hospitality surcharged with true devotion and love.